;
Athirady Tamil News

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: கமலா ஹாரிஸுக்கு ஆதரவு வழங்கியுள்ள ஒபாமா

0

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸின்(Kamala Harris) பெயர் முன்மொழியப்பட்டு வருகின்ற நிலையில், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும், அவரது மனைவி மிட்செலும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தொலைபேசியில் கதைத்து அதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும், இது தொடர்பான காணொளியையும் பராக் ஒபாமா(Barack Obama )சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்
குறித்த காணொளியில், கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பராக் மற்றும் மிச்செல் பேசுகின்றனர். கமலா ஹாரிஸ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜோ பைடன் தேர்தலிலிருந்து விலகியுள்ளார். அதனை தொடர்ந்து கமலா ஹாரிஸின் பெயர் முன்மொழியப்பட்டு வரும் நிலையில், ஜனநாயகக் கட்சி இவருக்கு ஆதரவு வழங்கியது.

எனினும்,பராக் ஒபாமா இது குறித்து எதுவும் கூறவில்லை. மேலும் மிச்செல் ஒபாமாவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

கமலா ஹாரிஸுக்கு ஆதரவு
எனினும் ஜோ பைடன் பின்வாங்கிய 4 நாட்களுக்குப் பிறகு நேற்று (26) பராக் ஒபாமாவும், அவரது மனைவி மிட்செலும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பராக் ஒபாமா கமலா ஹாரிஸிடம், மிட்செலும் நானும் உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், இந்தத் தேர்தலில் உங்களை வெற்றிபெறச் செய்து வெள்ளை மாளிகைக்கு வருவதற்கும் எல்லாவற்றையும் செய்வோம் என உறுதியளித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த கமலா ஹாரிஸ், தனக்கு ஆதரவளித்த ஒபாமா தம்பதியினருக்கு நன்றி தெரிவித்ததோடு, தங்களின் பல தசாப்த கால நட்புக்கு நன்றியும் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனநாயகக் கட்சி அடுத்த மாதம் ஓகஸ்ட் முதலாம் திகதி ஒரு தேசிய மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளது, அதில் கமலா ஹாரிஸ் முறையான வேட்பாளராக அறிவிக்க வாக்கெடுப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.