BMW, Benz Car அனைத்தும் போய்விட்டதே.., வெள்ளத்தில் மூழ்கியதால் உரிமையாளர் வேதனை
குருகிராமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் BMW, Benz Car அதன் உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முக்கிய நகரமான குருகிராமில் கனமழை பெய்ததால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு வசிக்கும் நபர் ஒருவர் தன்னுடைய விலையுயர்ந்த கார்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் வேதனை தெரிவித்து இன்ஸ்ட்கிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
வெள்ளத்தில் மூழ்கிய BMW, Benz Car
கஜோதர் சிங் என்ற நபர் ஒருவர் பதிவிட்ட வீடியோவில், “அவர் இருக்கும் பகுதியில் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்துள்ளது. அங்கு BMW, மெர்சிடஸ் பென்ஸ் (Mercedes Benz) போன்ற கார்கள் தண்ணீரில் மூழ்கியிருப்பது தெரிகிறது.
அதோடு அவர், “இது மும்பை அல்லது பெங்களூர் அல்ல. இந்தியாவின் மெட்ரோ நகரமான குருகிராம். நான் என் வீடு, BMW, மெர்சிடஸ் பென்ஸ், i20 கார்கள் ஆகியவை சேதமடைந்து தவிப்பதை பார்க்கத் தான் வரி செலுத்துகிறேன்.
எந்த அதிகாரிகளும் இன்னும் நிலைமையை சரிசெய்ய முன்வரவில்லை. மேலும் நான் மிகவும் உடைந்துவிட்டதாக உணர்கிறேன்.
என் வாழ்க்கையில் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்க என் கார் மட்டுமே என்னிடம் இருந்தது. எல்லாம் போய்விட்டது.
இந்த ஆழமான தண்ணீருக்குள் நுழைய எந்த கிரேனும் வராது. நான் அதை முயற்சித்தேன். நான் இப்போது உங்கள் அனைவரையும் இணை காவல் ஆணையர் மற்றும் முதல்வர் நயாப் சிங் சைனியை டேக் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
View this post on Instagram