;
Athirady Tamil News

யாழில் வர்த்தகர்களை இலக்கு வைத்து பண மோசடி

0

யாழில் வர்த்தகர்களைக் குறி வைத்து இலங்கை தொலைத்தொடர்பு திணைக்களம் மற்றும் அரச வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி பண மோசடிகள் இடம்பெறுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

சுன்னாகம், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்களின் தொலைபேசிக்கு இலங்கை தொலைத்தொடர்பு நிறுவகத்தில்(ரெலிக்கொம்) இருந்து கதைப்பதாகவும் நீங்கள் உங்களது தொலைபேசி கட்டணங்களை சிறந்த முறையில் செலுத்துவதன் காரணத்தால் உங்களுக்கு பரிசு வழங்கவுள்ளதாகவும் அதற்கு உங்கள் அடையாள அட்டை இல, வங்கிக் கணக்கு இலக்கம் என்பனவற்றினை தருமாறும் கோரியுள்ளனர்.

இத்தரவுகள் வர்த்தகர்களினால் வழங்கப்பட்ட சிறிது நேரத்தில் ஓர் OTP இலக்கம் வங்கியின் பெயரிலேயே அனுப்பப்படுவதாகும் சிலருக்கு வங்கிக்கு பணம் அனுப்பியது போன்று வங்கியின் பிரத்தியேக செயலிக்கே தரவுகள் அனுப்பப்படுவதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்பின் மீள் அழைப்பெடுக்கும் மர்மநபர்கள் அவ் குறித்த இலக்கங்களினை கோருவதாகவும் சுட்டிக்காட்டிய வர்த்தகர்கள் தாம் சந்தேகமடைந்து விசாரித்தால் அவ் அநாமதேய இலக்கத்தை மீளத் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

எனவே இவ்வாறான தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் அவதானமாகச் செயற்படுமாறும் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டிருப்பின் அருகில் உள்ள பொலிஸ்
நிலையத்தையோ அல்லது கணனி குற்றப்பிரிவின் துரித இலக்கங்களினையோ நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.