;
Athirady Tamil News

டிப்ளோமா பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

0

டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் ஈடுபட முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.

இந்த புதிய முறைமை தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“எதிர்காலத்தில் அனைத்துக் கல்லூரிகளும் ஒரே பல்கலைக்கழகமாக இணைக்கப்படும். 2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் இளநிலைக் கல்விப் பட்டதாரிகளாக இருப்பார்கள்.

உலகில் வேகமாக மாறிவரும் அறிவுக்கு ஏற்ப, ஆசிரியர்கள், மருத்துவர்கள் என ஒவ்வொரு தொழில் வல்லுநர்களும் தங்களது கல்வி தகைமையை மேம்படுத்த வேண்டும்.

கல்வி தரம்
அதேவேளை, ஆரம்பக் கல்வியின் அடிப்படையான அழகியல் பாடத்தை ஒருபோதும் பாடத்திட்டத்தில் இருந்து நீக்க முடியாது.

மேலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழிநுட்பம் ஆகிய பாடங்களை இணைத்து பாடசாலை பாடத்திட்டம் ஆக்கப்பூர்வமாக சர்வதேச தர கல்விக்கு உயர்த்தப்படும்.

இதற்கமைய, 100 பாடசாலைகளில் முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து அந்த ஆசிரியர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற உரிமம் வழங்கப்படும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.