;
Athirady Tamil News

கவனம்: உங்க வங்கி அக்கவுண்டில் இருந்து ரூ.295 ஏன் எடுக்குறாங்க தெரியுமா?

0

வங்கி அக்கவுண்டில் இருந்து ரூ.295 எடுக்கப்படுவது குறித்து பலர் குழப்பத்தில் உள்ளனர்.

எஸ்பிஐ வங்கி
எஸ்பிஐ வங்கி இந்தியா முழுவதும் கிளைகளை நடத்தி வருகிறது. பல்வேறு கடன் திட்டங்கள் மற்றும் பல சலுகைகள் கொடுக்கப்படுவதால் இந்த வங்கிக்கு வாடிக்கையாளர்கள் அதிகம்.

இந்நிலையில், தங்கள் சேமிப்புக் கணக்குகளில் இருந்து ரூ.295 கழிக்கப்படுகிறது. இது குறித்த எந்த தகவலும் தெரியவில்லை என வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

EMI விவரம்
மேலும், எந்த தகவலும் இல்லாமல் ரூ.295 எடுக்கப்படுவது ஏன் என பல்வேறு தரப்பு மக்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். நீங்கள் மாதத்தவணை முறையில் எதையாவது வாங்கினால், அந்த EMI விவரங்களை கவனிக்கும் பகுதிதான் NACH.

நீங்கள் emi செலுத்த வேண்டிய தொகை. அந்த குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருநாள் முன்னதாகவும் உங்கள் அக்கவுண்டில் இருக்க வேண்டும்.

இதனை NACH கவனித்துக் கொண்டிருக்கும். இது மிஸ்ஸானால் அபராதமாக ரூ.250 எடுக்கப்படும். அதற்கு வரி சேர்த்து மொத்தமாக ரூ.295 எடுக்கப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.