பிரான்சில் தொடருந்து பாதைகள் மீது தாக்குதல் – ஒலிம்பிக் போட்டிகளின் போது வன்முறை
ஒலிம்பிக் (Olympics) போட்டிகளிற்கு முன்னதாக பாரிசின் (Paris) முக்கியமான தொடருந்து பாதைகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரணமாக தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் உள்ள தொடருந்து பாதைகளை இணைக்கும் பிரான்சின் TGV அதிவேக தொடருந்து வலையமைப்பின் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அத்துடன் பிரான்சின் பல தொடருந்து பாதைகளில் தீமூண்டுள்ளதாக பிரெஞ்சு தொடருந்து நிறுவனமான (SNCF) தெரிவித்துள்ளது.
வன்முறையாளர்கள் தீ
லீல். போர்தோ மற்றும் ஸ்ட்ராஸ்பர்க் போன்ற நகரங்களுடன் பாரிஸை இணைக்கும் சமிக்ஞை பெட்டிகளுக்கும் வன்முறையாளர்கள் தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடருந்து சேவைகளை செயல் இழக்கச் செய்யும் விதத்தில் தொடர் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடிகுண்டு மிரட்டல்
இதேவேளை ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸின் (France) பாரிஸ் நகரில் ஆரம்பிக்கவுள்ள நிலையில், பிரான்ஸ் – சுவிஸ் எல்லையிலுள்ள ‘Mulhouse’ விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்துள்ளது.
இதனையடுத்து, விமான நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதன்பின்னர், அது போலியான மிரட்டல் என்பது தெரியவர, விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.