வாழ்க்கையை மாற்றிய சிறிய பூச்சி! கண்களை இழந்த சீன வாலிபர்
சீனாவில் வசிக்கும் நபர் ஒருவர், தனது முகத்தில் அமர்ந்திருந்த ஒரு பூச்சியை அடித்ததால் ஏற்பட்ட தொற்று காரணமாக தனது இடது கண்ணை நீக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளார்..
சவுத் சீனா மார்னிங் போஸ்ட் (SCMP) பத்திரிகையின் தகவலின்படி, வூ என்ற புனைப்பெயர் கொண்ட அந்த நபர், தனது முகத்தில் அமர்ந்த பூச்சியை அடித்து கொன்றுள்ளார்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அவரது இடது கண் சிவந்து வீங்கியதுடன் வலிக்கத் தொடங்கியுள்ளது.
இதன் பிறகு அவர் உடனடியாக மருத்துவரை நாடி சிகிச்சை பெற்ற பிறகும், அவரது நிலைமை மோசமடைந்துள்ளது. அத்துடன் இறுதியில் அவரது இடது கண்ணை நீக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது..
செய்திகளின் அடிப்படையில், சீனாவின் தெற்கு குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஷென்ஷென் நகரில் வசிக்கும் அந்த நபருக்கு பருவகால கண் இணைப்புழை அழற்சி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் பாதிப்பு கடுமையானதை தொடர்ந்து பாதிப்பை குறைப்பதற்காக மருத்துவர்கள் அவரது இடது கண்களை நீக்கியுள்ளனர்.
ஏனெனில் கண் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாக புண்களாகிவிட்டன. தொற்று அவரது மூளைக்கு பரவுவதற்கான அச்சுறுத்தல் இருந்ததால், மருத்துவர்கள் அவரது முழு இடது கண் பந்தையும் நீக்க வேண்டியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.