ஜேர்மனியில் குறைந்த புகலிடக்கோரிக்கைகள்: மேலும் குறையவேண்டும் என்கிறார் சேன்ஸலர்
ஜேர்மனியில், ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், புகலிடக்கோரிக்கைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
இந்நிலையில், சட்டவிரோத புலம்பெயர்தலை மேலும் குறைக்கவேண்டும் என்று கூறியுள்ளார் ஜேர்மன் சேன்ஸலர்.
சட்டவிரோத புலம்பெயர்தல் மேலும் குறையவேண்டும்
கடந்த ஆண்டு சட்டவிரோத புலம்பெயர்தல் அதிகரித்த நிலையில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் முதன்முறை புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை 19 சதவிகிதம் குறைந்துள்ளது.
இந்நிலையில், நேற்று ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், சட்டவிரோத புலம்பெயர்தலை மேலும் குறைக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைவோரைத் தடுக்க, எல்லை சோதனைகளை கடுமையாக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.