;
Athirady Tamil News

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை என்ன? ஓய்வுபெற்ற IAS அதிகாரிகளுடன் விஜய் ஆலோசனை

0

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் தொடர்பாக ஓய்வுபெற்ற IAS அதிகாரிகளுடன் விஜய் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேலம் மாநாடு
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அவர் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்தும், மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தும் வருகிறார்.

இந்நிலையில், தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வேலைகளை நடிகர் விஜய் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தவுள்ளார்.

அதற்குரிய வேலைகளையும் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். விஜயின் அரசியல் மாநாட்டை சேலத்தில் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேலம் அருகே உள்ள தலைவாசல், கெஜல்நாயக்கன்பட்டி, காக்காபாளையம் ஆகிய பகுதிகளில் இருக்கும் மைதானங்களில் உள்ளூர் நிர்வாகிகளுடன் புஸ்ஸி ஆனந்த் ஆய்வினை மேற்கொண்டுள்ளார்.

விஜய் ஆலோசனை
தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டில் கொள்கைகள் குறித்து அறிவிக்க வேண்டும் என்பதால் அக்கட்சியின் தலைவர் விஜய் பலரிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அந்தவகையில், ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அரசியல் விமர்சகர்கள் என பல்வேறு தரப்பினாரிடம் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தற்போது, விஜய் கட்சியின் கொள்கைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.