மனிதர்கள் இனி AI உதவியுடன் தங்கள் செல்லப்பிராணிகளுடன் உரையாடலாம்: அறிவியலாளர் கூறும் ஆச்சரிய தகவல்
திர்காலத்தில், மனிதர்கள் AI உதவியுடன் தங்கள் செல்லப்பிராணிகளுடன் உரையாட முடியும் என்று கூறியுள்ளார் அறிவியலாளர் ஒருவர்.
அறிவியலாளர் கூறும் ஆச்சரிய தகவல்
Dr Jess French, விலங்கியல், கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை மருத்துவத்தில் பட்டம் பெற்ற ஒரு அறிவியலாளர் ஆவார்.
புகழ் பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றையும் நடத்துகிறார் Dr French.
அவர், எதிர்காலத்தில் நாம் artificial intelligence உதவியுடன், நமது செல்லப்பிராணிகளை புரிந்துகொள்வது மட்டுமல்ல, அவற்றுடன் நேரடியாக உரையாடவும் இயலும் என்று கூறியுள்ளார்.
குறிப்பாக, மருத்துவர்களிடம் கொண்டுவரப்படும் நாய்கள், தங்களுக்கு என்ன பிரச்சினை என தாங்களே அவர்களிடம் கூறும் நிலை உருவாகும் என்று கூறியுள்ளார் Dr French.
ஒரு அபாயமும் உள்ளது
ஆனால், வனவிலங்குகள் தங்களுக்குள் பேசிக்கொள்வதை புரிந்துகொள்ள முயன்றால் ஆபத்து என்றும் கூறியுள்ளார் Dr French.
சிலர், நாம் அது குறித்த தகவல்களை சேகரித்துவைத்துள்ளோம். ஒருவேளை பதிவு செய்துவைத்துள்ள இந்த தகவல்களை விலங்குகள் கேட்கும் வகையில் ஒலிக்கச் செய்தால், அவை எப்படி ரியாக்ட் செய்கின்றன என்பதைப் பார்க்கலாம் என்கிறார்கள்.
ஆனால், அது ஆபத்தான ஒரு விடயம் என நான் கருதுகிறேன் என்று கூறும் Dr French, குறிப்பாக திமிங்கலங்கள் நாம் அவற்றிற்கு கூறும் ஒரு செய்தியை ஒரு செய்தியை உலகிலுள்ள சமுத்திரங்கள் முழுவதிலும் பரப்புகின்றன என்று வைத்துக்கொள்வோம், நாம் அவற்றைக் குறித்த போலிச் செய்திகளையும் பரப்பும் நிலை ஏற்படலாம் என்கிறார்.