பெங்களூருவுக்கு வந்திறங்கிய 3000 கிலோ நாய் இறைச்சி? பின்னணியில் யார்?
பெங்களூரு ரயில் நிலையத்தில் 150 பெட்டிகளில் சுமார் 3000 கிலோ நாய் இறைச்சி வந்திறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாய் இறைச்சி?
இந்திய மாநிலமான கர்நாடகா, பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலயத்தில் நேற்று இரவு 150 பெட்டிகளில் சுமார் 3000 கிலோ (3 டன்) பதப்படுத்தப்பட்ட இறைச்சி அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
அவை ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த இறைச்சியானது வித்தியாசமான முறையில் இருந்ததால் ரயில் நிலையத்தில் இருந்த மக்கள் அதனை பார்க்க கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதாவது அந்த இறைச்சியானது நாய் இறைச்சி என்று புனீத் கேரஹல்லி என்ற பசுப் பாதுகாவலரும் அவரது சாகாக்களும் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல், பெங்களூரு ஹொட்டலுக்கு இந்த இறைச்சி சப்ளை செய்யப்படுவதாகவும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் அவர்களை காவலில் எடுத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த இறைச்சியை விற்பதற்காக அப்துல் ரசாக் என்ற டீலர் ஜெய்ப்பூரில் இருந்து கொண்டுவந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், தான் வரவழைத்தது ஆட்டிறைச்சி என்றும், அதற்குரிய ஆதாரம் இருப்பதாகவும் ரசாக் கூறியுள்ளார். மேலும், தன்னை பொய் வழக்கில் சிக்கவே சதி நிகழ்த்தியதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், அது உண்மையில் என்ன இறைச்சி என்று தெரிந்துகொள்ள போலீசார் பரிசோதனைக்கு அனுப்பியுன்னர்.