;
Athirady Tamil News

167 நாடுகளுக்கு சென்றுவிட்டோம்! முதன்மை நாடுகளை பட்டியலிட்ட உலகம் சுற்றும் தம்பதி

0

அமெரிக்காவைச் சேர்ந்த ஹட்ஸன், எமிலி என்ற ஜோடி உலகின் 167 நாடுகளை சுற்றிப் பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.

உலகின் மிக அழகான நாடுகளில்
மெக்ஸிகோவில் வசித்து வரும் ஹட்ஸன் (Hudson) மற்றும் எமிலி (Emily) என்ற ஜோடி அமெரிக்காவின் 50 மாகாணங்களை சுற்றிப் பார்த்து பிரபலமாகினர்.

அதனைத் தொடர்ந்து 100 நாடுகளுக்கு செல்ல வேண்டும் என இந்த ஜோடியின் இலக்கு வளர்ந்தது. ஆனால் தற்போது 167 நாடுகளுக்கு பயணித்துவிட்டதாக ஹட்ஸன், எமிலி தெரிவித்துள்ளனர்.

2012யில் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதி, சுவிட்சர்லாந்து உலகின் மிக அழகான நாடுகளில் ஒன்று என்றும், அங்கு ஒவ்வொரு நடைபயணம் மற்றும் ரயில் பயணமும் மூச்சடைக்கக்கூடியது என்றும் சிலாகித்துள்ளனர்.

நம்ப முடியாத நகரம்
அதேபோல் முதன்மையாக சில நாடுகளின் பயணம் குறித்தும் இந்த தம்பதி கூறியுள்ளது. அர்ஜென்டினாவின் Buenos Air நகரம் ஒரு நம்ப முடியாத நகரம் என்றும், ‘Patagonia’ வேறு எந்த இடத்தையும் போல அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

உலகின் அழகான அருவி பிரேசிலின் Paranaவில் உள்ளது என்று கூறும் ஹட்ஸன் மற்றும் எமிலி, ஐஸ்லாந்தை ‘எரிமலைகள், அருவிகள், தடாகங்கள், கருப்பு மணல் கடற்கரைகள் மற்றும் பலவற்றைப் பார்க்க சாலைப் பயணத்திற்கு எளிதான நாடுகளில் ஒன்றாகும்’ என்று குறிப்பிடுகின்றனர்.

இத்தாலி, கனடா, அவுஸ்திரேலியா, துனிசியா, ஜப்பான் போன்ற நாடுகளின் சுற்றுலாத்தலங்களை விவரிக்கும் இந்தத் தம்பதி பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் ‘உலகின் மிக அழகான மலைகள், சில நட்பு மனிதர்களுடன் ஜோடியாக இருக்கலாம்’ என்றனர்.

மேலும், 2025ஆம் ஆண்டுக்குள் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று வருவதை இலக்காகக் கூறுகின்றனர் ஹட்ஸன் மற்றும் எமிலி.

You might also like

Leave A Reply

Your email address will not be published.