அனுரவின் அடுத்த நகர்வு! ஆசியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு தேர்தல் பிரச்சாரம்
தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுர குமார திசாநாயக்கவின் (Anurakumara Diassanayake) “akd.lk” என்ற புதிய இணையத்தளம் ஒன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (27) இடம்பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் கொள்கை மத்திய நிலையம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு கேந்திர நிலையம் என்பவற்றை இணையத்தள வசதியுடன் இயக்கும் செயற்பாடுகளும் இதன் போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி வேட்பாளர்
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தமது கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதே இந்த இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டதன் பிரதான நோக்கமாக கூறப்படுகின்றது.
இதனூடாக மும்மொழியிலும் மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகள் தொடர்பான விபரங்களை புதிய இணையத்தளத்தின் ஊடாக பெற முடியும்.
மேலும், மக்கள் தமது பிரச்சினைகளை முன்வைப்பதற்கும் கருத்துக்களை தெரிவிப்பதற்கும் இதனூடாக சந்தரப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் தலைவர்
குறிப்பாக, தேர்தல் செயற்பாடுகளின் போது இடம்பெறும் முறைகேடுகள் குறித்தும் மக்கள் akd.lk இணையத்தளத்தின் வாயிலாக தகவல்களை தெரிவிக்க முடியுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆசியாவில் அரசியல் தலைவர் ஒருவர் தனது கொள்கைகளை முன்வைப்பதற்காக செயற்கை நுண்ணறிவு (AI) தொழிநுட்பத்தை பயன்படுத்தும் முதல் சந்தர்பம் இதுவாகும் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.