;
Athirady Tamil News

இலங்கை வீதியொன்றுக்கு சூட்டப்பட்டுள்ள தமிழ் நடிகரின் பெயர்

0

காலஞ்சென்ற இலங்கையின் நடிகரான தர்ஷன் தர்மராஜின்(Darshan Dharmaraj) பெயர் வீதி ஒன்றிற்கு சூட்டப்பட்டுள்ளது.

தர்ஷன் தர்மராஜின் பிறப்பிடமான இறக்குவானையிலுள்ள வீதி ஒன்றிற்கே அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதாவது தர்ஷன் தர்மராஜின் வீட்டிற்கு செல்லும் வீதிக்கே இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தமிழ் நடிகரின் பெயர்

தர்ஷன் தர்மராஜின் பெயர் சூட்டப்பட்ட வீதியின் பெயர் பலகை திறப்பு நிகழ்வு நேற்று (27) வெகு விமர்சையாக இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் தமிழ் நடிகர் ஒருவரின் பெயர் முதல் தடவையாக வீதியொன்றிற்கு சூட்டப்படுகின்றது.

இலங்கையில் சிங்கள திரைப்படத் துறையில் முன்னணி நடிகராக திகழ்ந்த தர்ஷன் தர்மராஜ் 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் 2ஆம் திகதி திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.