;
Athirady Tamil News

தீவக கல்வி தராதரத்தை மேம்படுத்த நடவடிக்கை

0

தீவக பிரதேச கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கும் அப்பகுதியின் கல்வி தரத்தை மேம்படுத்துவது தொடர்பிலும் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.

யாழ் மாவட்டத்தின் தீவக கல்வி வலைய பாடசாலைகளில் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் ஆளணி பற்றாக்குறை நிர்வாக பிரச்சினைகள் காணப்படுவதாகவும் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதில் இவ்வாறான காரணிகள் பல தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும் பலதரப்பட்டவர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.

இந்நிலையிலேயே குறித்த கலந்துரையாடல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அமைச்சரின் யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது – தீவக பிரதேசத்தில் காணப்படும் பிரச்சிகைள் குறித்தும் அவற்றுக்கு தீர்வு காண்பதற்கான ஏதுநிலைகள் குறித்து இருதரப்பினரும் இதன்போது விரிவாக ஆராய்ந்திருந்தனர்.

இந்நிலையில் தீவக கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்வித்தர நிலையை மேம்படுத்தி மாணவர்களுக்கு சிறந்ததோர் கல்விச் சேவையை பெற்றுக்கொடுக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தீவக கல்வி வலையத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் தற்போது கல்வி நிலை வீழ்ச்சி அடைந்துள்ளதை புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டகின்றன.

இந்நிலையில் அது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் விசேடமாக ஆராந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கல்வி நிலைகளை மேம்படுத்தும் நோக்கில் துறைசார் கல்வி நிலை அதிகாரிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் எடுத்துக் கூறியிருந்தார்.

அத்துடன் கல்வித்துறையில் இருக்கக்கூடிய குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான எதுநிலைகள் குறித்து துறைசார் அமைச்சின் கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வகளை காண்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.