;
Athirady Tamil News

ரணில், டக்ளஸ், கூட்டமைப்பினர் ஏமாற்று பேர்வழிகள் -(video)

0
video link-

 

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகடைக்காயாக பயன்படுத்தி விட்டு ஏமாற்றினார், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆகியோரும் கறிவேப்பிலைகளாக பயன்படுத்தி விட்டு கைவிட்டனர் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் வருத்தம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் உள்ள அலுவலகத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்

வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த அரச சேவையில் உள்ள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் தேர்தல்களில் யாரை ஆதரிப்பது? என்பது கேள்விக்குறியாக நீடிக்கின்றது.ஏனென்றால் எமது நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இன்னமும் பேரம் பேசும் சக்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொழிற்சங்கங்களுக்கு கிடைப்பதாக இல்லை.

வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல் தலைமைகள் தேர்தல் வெற்றிகளுக்காக மாத்திரம் எம்மை பயன்படுத்தி விட்டு நட்டாற்றில் கை விட்டு சென்றிருக்கின்றனர் என்பதே வரலாறு.இந்த நிலை மாற்றப்பட வேண்டும். மலையகத்தின் உழைக்கும் தோட்ட தொழிலாளர் வர்க்கம் பாரிய அரசியல் சக்தியாக மாறி அவர்களின் உரிமைகளை வென்றெடுத்துள்ளது.எனவே வடக்கு, கிழக்கை சேர்ந்த அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஏன் எமது உரிமைகளை வென்றெடுக்க முடியாது? நாம் பேரம் பேசும் சக்தியாக எழுச்சி பெற வேண்டும்.

அரசாங்க அதிபர் தொடக்கம் அலுவலக பணியாளர்கள் வரை அரசாங்க ஊழியர்கள்தான். மலையகத்தில் ஏற்பட்ட பேரெழுச்சி எமது அரசாங்க ஊழியர்கள் மத்தியிலும் ஏற்பட வேண்டும்.வடக்கு, கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரை மிக மூத்த தொழிற்சங்கம் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம்தான். நல்லாட்சியை ஏற்படுத்த நாம் ரணில் விக்கிரமசிங்கவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டோம்.அப்போது அவரை வடக்கு, கிழக்கில் ஆதரித்த ஒரேயொரு தொழிற்சங்கம் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம்தான். ஆனால் அவர் எம்மை ஏமாற்றினார்.

அதே போல எமது ஒத்துழைப்பை பெற்ற டக்ளஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆகியோரும் நம்ப வைத்து கழுத்தறுத்தனர். நாங்கள் பாதிக்கப்பட்டோம்.ஆனால் நாம் யாருக்கும் அடிமைகள் அல்லர். யாருக்கும் அடி பணிய மாட்டோம். எமது நோக்கம் ஸ்ரீலங்கா அரச சேவையாளர்கள் சம்மேளனத்தை புனரமைத்து அதன் மூலம் வடக்கு, கிழக்கில் மாபெரும் சக்தியாக எதிர்காலத்தில் பிரவாகம் எடுப்பதாகும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.