நாள்பட்ட நோய்களை விரட்டியடிக்கும் சாத்துக்குடி ஜூஸ் – யாரெல்லாம் குடிக்கலாம் தெரியுமா?
நாள்பட்ட நோய்களை குணமாக்கும் மூலிகை பானங்களில் சாத்துக்குடி ஜூஸ் ஒன்று.
மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால் எளிதில் செரிமானம் அடைந்து உடல் புத்துணர்வு அடையும்.
இந்த பானத்தில் இருக்கும் சத்துக்கள் எலும்பு தேய்மானத்தை தடுத்து வலுப்படுத்துகின்றது.
அத்துடன் செரிமானத்துடன் தொடர்பிலான பிரச்சினைகள் அதிகம் உள்ளவர்களும் சாத்துக்குடி ஜூஸ் குடிக்கலாம்.
இப்படி ஏகப்பட்ட நோய்களுக்கு தீர்வு வழங்கும் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் வேறு என்னென்ன நன்மைகள் இருக்கின்றன? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சாத்துகுடி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்
1. சிலருக்கு சளி, வறட்டு இருமல் உள்ளிட்ட பிரச்சினைகள் அதிகரிக்கும் பொழுது தொண்டையில் புண்கள் ஏற்படலாம். இப்படியான நேரங்களில் வெதுவெதுப்பான நீரில் சாத்துக்குடி ஜூஸ் தயார் செய்து குடிக்கலாம். இது புண்களை ஆற்றி உடனடி நிவாரணம் தரும்.
2. நம்மில் பலருக்கு காலை எழுந்தவுடன் வாய் துர்நாற்றம் அதிகமாக இருக்கும். இவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸ் குடிக்க வேண்டும். இதனை சரியாக செய்து வந்தால் துர்நாற்றம் பிரச்சினை காலப்போக்கில் இல்லாமல் போகும்.
3. புற்றுநோய் பாதிப்புள்ளவர்கள் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வரலாம். சாத்துகுடியில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் இருக்கின்றன. இது புற்றுநோய் செல்லின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் என கூறப்படுகின்றது.
4. சாத்துகுடியில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், நார்ச்சத்துக்கள் உள்ளன. இது உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து உடலை சிலிம்மாக மாற்றும். அத்துடன் இருதய பிரச்சனை உள்ளவர்கள் சாத்துகுடியில் ஜுஸ் செய்து குடித்து வந்தால் இதய நோய்கள் சீக்கிரம் குணமடைய வாய்ப்பு இருக்கிறது.