;
Athirady Tamil News

ரூ.4 கோடி மதிப்புள்ள படகை கடலில் மூழ்கடித்த கில்லர் திமிங்கலங்கள்

0

சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள படகை கில்லர் திமிங்கலங்கள் தாக்கியதில் கடலில் மூழ்கியது.

போர்ச்சுகலில் இருந்து கிரீஸ் நோக்கிச் சென்ற படகு ஒன்று 5 கில்லர் திமிங்கலங்களால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் போஸ்ட் படி, 12,000 டொலர் ( இலங்கை பணமதிப்பில் ரூ. 3.87 கோடி) மதிப்புள்ள இந்த படகு மத்தியதரைக் கடலில் கில்லர் திமிங்கலங்கள் என அழைக்கப்படும் Orca திமிங்கலங்களால் சுற்றி வளைக்கப்பட்டது.

இந்த சம்பவம் நடந்தது ஜூலை 24-ஆம் திகதி, ஆனால் இது குறித்த தகவல் சனிக்கிழமை தான் வெளிச்சத்திற்கு வந்தது.

அறிக்கையின்படி, 59 வயதான ராபர்ட் பவல் (Robert Powell) தனது பிறந்தநாளைக் கொண்டாட தனது நண்பர்களுடன் 10 நாள் பயணத்திற்குச் சென்றுள்ளார்.

பயணத்தைத் தொடங்கிய 22 மணி நேரத்திற்குப் பிறகு 39 அடி நீளமுள்ள படகு மீது திமிங்கலங்கள் குழு ஒன்று தாக்கியது. அவை படகை எல்லா பக்கங்களிலும் சுற்றி வளைத்தன. இதையடுத்து படகு மீது தாக்குதல் நடத்தின.

ஸ்பெயினில் இருந்து 2 மைல் தொலைவில் மத்தியதரைக் கடலில் இருந்த இந்தப் படகு, சுமார் ஒன்றரை மணிநேரம் தொடர்ந்த தாக்குதலுக்குப் பிறகு படகு அழுத்தத்தைத் தாங்க முடியாமல் இரண்டு பகுதிகளாக உடைந்தது.

இதனால் படகில் வசிக்கும் பகுதி தண்ணீரால் நிரம்பத் தொடங்கியது. அந்த நேரத்தில் தான் ஸ்பெயினின் கடற்கரையிலிருந்து 2 மைல் தொலைவில் இருந்ததாக பவல் கூறினார். படகு குழுவினர் உடனடியாக உதவிக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

தாக்குதல் தொடங்கி சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, அவர்களுக்கு உதவ ஒரு ஸ்பானிஷ் கப்பல் வந்தது. அவர் பணியாளர்களை காப்பாற்றினார். சில நிமிடங்களில் படகு மத்தியதரைக் கடலில் 130 அடி ஆழத்தில் மூழ்கியது.

கில்லர் திமிங்கலங்கள் பட்டாசு வெடித்தால் கூட ஓடவில்லை
திமிங்கலங்களை விரட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக பவல் கூறினார். வெடி வெடித்தால் திமிங்கலங்கள் ஓடிவிடும் என்பதற்காக பட்டாசுகளை தண்ணீரில் போட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர் படகின் இன்ஜினை அணைத்துவிட்டார். இருந்தபோதிலும், திமிங்கலங்கள் தொடர்ந்து தாக்கியதாக கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.