;
Athirady Tamil News

115 கிலோவில் இருந்து 67 கிலோ..! பிரித்தானிய பெண்ணின் உடல் எடை குறைப்பு ரகசியம்

0

115 கிலோவிலிருந்து 67 கிலோவாக உடல் எடையை குறைத்த பிரித்தானிய இளம் பெண் சமூக வலைதளங்களை கலக்கி வருகிறார்.

உடல் எடை குறைப்பு
பிரித்தானியாவின் நார்த்தாம்டனில் 20 வயதான ஒரு சந்தைப்படுத்தல் நிர்வாகி (marketing executive) ஒருவர் தனது அபாரமான உடல் எடை குறைப்பால் சமூக ஊடகத்தை வெகுவாக கவர்ந்துள்ளார்.

ஒரு காலத்தில் 115 கிலோ எடை கொண்ட மில்லி ஸ்லேட்டர்(Millie Slater) என்ற அந்த பெண், தற்போது 67 கிலோவாக தனது உடல் எடையை குறைத்துள்ளார்.

அத்துடன் தனது தீவிரமான உடல் மாற்றத்தை இணையத்தில் பதிவேற்றி மில்லியன் கணக்கானோருக்கு ஊக்கம் அளித்து வருகிறார்.

2023ம் ஆண்டு தனது உடல் ஆரோக்கிய முயற்சிகளை கையில் எடுத்த ஸ்லேட்டர், உடற்பயிற்சி மற்றும் சமமான உணவு முறைகள் மூலம் உடல் எடையை குறைத்துள்ளார்.

ஸ்லேட்டரின் இந்த அபார வெற்றிக்கு அவரது நடை பயிற்சி ஆர்வம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

பிரபலமான பிட்னஸ் செல்வாக்காளர் லாரன் கிரால்டோ (Lauren Giraldo) பிரபலப்படுத்திய 12-3-30 நடைப்பயிற்சியால் ஈர்க்கப்பட்ட ஸ்லேட்டர், தனது இந்த பயிற்சியில் சாய்வுடன்(incline walking) கூடிய நடையை இணைத்து வெற்றி பெற்றுள்ளார்.

12-3-30 நடைப்பயிற்சி
பயோமெக்கானிக்ஸ் ஜர்னலில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், தட்டையான தளத்தில் நடப்பதை விட 5% சாய்வுடன் நடப்பது 17% அதிக கலோரிகளையும், 10% சாய்வுடன் நடப்பது 32% அதிக கலோரிகளையும் எரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

ஹெல்த் சென்ட்ரலின் கூற்றுப்படி, வெறும் 30 நிமிட 12-3-30 பயிற்சியில், 150 பவுண்டு எடையுள்ள ஒரு நபர் சுமார் 300 கலோரிகளை எரிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.