மகிந்தவுடனான ரகசிய சந்திப்பில் ரணில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் (Ranil Wickremesinghe) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் (Mahinda Rajapaksa) இடையில் ரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (28) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இருவருக்கும் இடையே மட்டும் நடந்த உரையாடலில் என்ன பேசப்பட்டது என்பது தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.
இறுதி தீர்மானம்
எவ்வாறாயினும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்குவது தொடர்பிலும் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) இறுதி தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
இதன் படி, கட்சியின் விருப்பத்திற்கு இணங்க யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.