;
Athirady Tamil News

சாதனை படைத்த இலங்கை மகளிர் கிரிக்கட் அணி

0

9ஆவது மகளிர் ஆசியக் கிண்ண ரி 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அபார வெற்றியீட்டி சாதனை படைத்துள்ளது.

தம்புள்ளை ரங்கிரி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதேவேளை, இலங்கை அணிக்கு 166 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 18 ஓவர்கள் நிறைவில் 167 ஓட்டங்களை பெற்று ஆசியக்கிண்ணத்தை வெற்றிக் கொண்டது .

இலங்கை ஆண்கள் அணி பல்வேறு தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் மகளிர் அணி இலங்கைக்கு வெற்றி வாகை சூடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மகளிர் அணி முதல் தடவையாக ஆசிய கிண்ணத்தை வென்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.