இந்த மாநிலத்தில் தான் மது குடிக்கும் பெண்கள் அதிகம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியது.
மது அருந்தும் பெண்கள்
எந்தெந்த மாநிலங்களில் பெண்கள் அதிகளவில் மது குடிக்கிறார்கள் என்ற கேள்வியுடன் முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து அதன் புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் 15-49 வயது வரையிலான பெண்களில் 26.3 சதவீதம் பேர் மது குடிக்கின்றனர். இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை விட மிக அதிகம். மேகாலயாவில் 15-49 வயதுக்குட்பட்ட பெண்களில் 8.7 சதவீதம் பேர் மது குடிக்கின்றனர்.
ஆய்வில் தகவல்
தேசிய சராசரியான 1.2 சதவீதத்தை விட மிக மிக அதிகமாகும். அருணாச்சலப் பிரதேசத்தில் பெண்கள் மது குடிப்பது 3.3% ஆக உள்ளது. அதே வயதுடைய ஆண்களில் 59% பேர் மது குடிக்கின்றனர். சிக்கிம் மாநிலத்தில் 15-49 வயது வரையிலான பெண்களில் 0.3 சதவீதம் பேர் மது குடிக்கின்றனர்.
சத்தீஸ்கரில் 0.2 சதவீதம், ஜார்கண்ட் மாநிலத்தில் முன்பு 9.9%, திரிபுராவில் 9.6 சதவீதமாக பெண்கள் மது குடிக்கும் எண்ணிக்கை உள்ளது.