குறைவடையும் வட்டி வீதங்கள்: ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
நாட்டில் கடந்த காலங்களை விட இன்று இலங்கை ரூபாய் வலுவடைந்துள்ளதுடன் வட்டி வீதம் குறைகிறது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியை நான்கு மடங்காக அதிகரிக்கும் இயலுமை உள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அண்மையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டை முன்னேற்ற வழி
இது தொடர்பில் ரணில் மேலும் தெரிவிக்கையில், 2048 பற்றி நான் பேசிய போது எதிர்கட்சியினர் ஏளனமாக சிரித்தார்கள்.
ஆனால் தற்போதுள்ள இளைஞர்கள் 2048 ஆம் ஆண்டிலேயே ஐம்பது வயதை அடைவார்கள் என்பது எதிர்கட்சியினருக்கு விளங்கவில்லை.
நாட்டுக்கு இன்னும் பல முதலீடுகளை கொண்டு வர வேண்டும். தொழிற்சாலைகளைக் கொண்டு வர வேண்டும். ஹோட்டல்களைக் கொண்டுவர வேண்டும்.
மொத்த தேசிய உற்பத்தி
நாம் வலுவடைய வேண்டியது அவசியம். இன்று நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 85 பில்லியன் டொலர்களாக காணப்படுகிறது.
இந்த தசாப்தத்தின் இடைப்பகுதியில் அதனை 350 பில்லியன் டொலர்கள் வரையில் அதிகரிக்க வேண்டும்.
அதனை நான்கு மடங்காக அதிகரிக்கும் இயலுமை எம்மிடம் உள்ளது என ரணில் தெரிவித்துள்ளார்.
நகை அடகு
வங்கிகளில் மக்கள் நகைகளை அடகு வைக்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.
ஆனால் பிரச்சினைகளுக்கு படிப்படியாகத் தீர்வுகளை வழங்கி வருகிறோம், அத்தோடு பொருளாதாரம் வலுவடையும் போது எமது கஷ்டங்களுக்கு தீர்வுகள் கிடைக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.