காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: பலஸ்தீன கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்!
காசா (Gaza) பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 10,000 மாணவர்கள் மற்றும் 400 ஆசிரியர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தகவலை பலஸ்தீன (Palastine) கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், காசாவில் உள்ள 76 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளிகள் செயல்படுவதற்கு முழு புனரமைப்பு தேவை என்று ஐ.நா (U.N) தெரிவித்துள்ளது.
உயர்கல்வி அமைச்சர்
இதற்கிடையில், பலஸ்தீனிய கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் அம்ஜத் பர்ஹாம் (Amjad Barham) காசா பகுதியைச் சேர்ந்த 39,000 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு தேர்வுகளில் பங்கேற்கவில்லை என கூறியுள்ளார்.
குறிப்பாக, இஸ்ரேலிய (Israeli) அரசினால் 117 பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன், 332 பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பகுதியளவில் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஹமாஸ் தலைமை
கடந்த ஆண்டு, அக்டோபர் 7 அன்று தொடங்கிய காசா மீதான இஸ்ரேலின் போரில் 39,363 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 90,923 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், ஹமாஸ் (Hamas) தலைமையிலான தாக்குதல்களின் போது இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டதுடன் 200-க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.