கோலன் ஹைட்ஸ் தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதிலடி!
இஸ்ரேலின் (Israel) கட்டுப்பாட்டில் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியில் மேற்கொற்கொள்ளப்பட்ட வான்வழித்தாக்குதலுக்கு ஹிஸ்புல்லாவே (Hezbollah) காரணம் என்று இஸ்ரேலிய அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளதாக சர்வதேச உடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலுக்கு பதிலடி வழங்குவதற்கான தீர்மானங்களை மேற்கொள்ள இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு பிரதமர் நெதன்யாகுவிற்கு (Netanyahu) அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில், கோலன் ஹைட்ஸ் கிராமத்தில் அமைந்துள்ள காற்பந்து மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
வான்வழித் தாக்குதல்
இதற்கு பதிலடியாக, இஸ்ரேலிய இராணுவம் லெபனானில் (Lebanon) உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது பல வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவத்துடன் இரு தரப்புக்கும் இடையிலான எல்லை மோதல்கள் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், குறித்த தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் பலரும் தமது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்ற நிலையில் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டை ஹிஸ்புல்லா அமைப்பு மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.