;
Athirady Tamil News

கிளி/பரந்தன் இந்து மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை

0

வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் பாடசாலைகளுக்கு இடையோன பெருவிளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் கிளி/பரந்தன் இந்து மகா வித்தியாலயம் கைப்பந்து (Hand Ball) போட்டியில் மாகாண மட்டத்தில் நான்கு சாதனைகளைப் படைத்துள்ளது

இந்த சாதனையூடாக பாடசாலைக்கும் கிளிநொச்சி வடக்கு வலயக்கல்வி திணைக்களத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்

இதேவேளை குறித்த அணியினர் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

நடந்து முடிந்த குறித்த போட்டியின் சிறந்த வீரராக கிளிநொச்சி பரந்தன் இந்த மகாவித்தியாலய மாணவன் சூ.விஜயசாந் தெரிவுசெய்யப்பட்டிருந்ததுடன், சிறந்த வீராங்கனையாக அதே பாடசாலையை சேர்ந்த இ.தனுசிகா தெரிவுசெய்யப் பட்டிருந்தார்

கிளி/பரந்தன் இந்து மகா வித்தியாலயம் மாணவர்கள் பெற்ற வெற்றி விபரங்கள்

20 வயதுபிரிவு பெண்கள் அணி – முதலாமிடம்(Champion)

17 வயதுப்பிரிவு பெண்கள் அணி – முதலாமிடம்(Champion)

20 வயதுப்பிரிவு ஆண்கள் அணி – முதலாமிடம்(Champion)

17 வயதுப்பிரிவு ஆண்கள் அணி – மூன்றாமிடம்(2nd Runner Up)

ஆகிய வெற்றிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்

குறித்த மாணவர்களுக கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பாடசாலை சமூகம தெரிவித்துக் கொள்வதுடன் சிறப்பாக பயிற்சிகளை வழங்கிய சி.கோகுலன் ஆசிரியர், பயிற்றுவிப்பாளர் செ.சோபிதன் மற்றும் விளையாட்டுப் பொறுப்பாசிரியர் சி.சசிகரன், ம.துவாரகன் ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகத்தினர் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.