;
Athirady Tamil News

பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு

0

பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் தற்போதும் ரணில் விக்ரமசிங்கவுக்கே காணப்படுகின்றது என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் சொத்துக்கள்
மேலும் தெரிவிக்கையில், “பொலிஸ் மா அதிபரை தான் நியமிக்க முடியாது என்று சொல்வதை ஏற்க முடியாது ரனில் விக்ரமசிங்க ஐந்து முறை பிரதமராகவும் தற்போது ஜனாதிபதியாகவும் 47 வருட அரசியல் வாழ்க்கையில் நாட்டிற்கு எதையும் செய்யவில்லை.

நாட்டிலே ஜூலை மாதத்திலே 41 வருடத்திற்கு முன்னர் நடந்த ஜூலை கலவரத்திற்கு இவர்களின் ஐக்கிய தேசியக் கட்சியே காரணமாக இருந்து தமிழ் மக்களின் சொத்துக்களையும் உயிர்களையும் பறித்தது.

இவ்வாறாக தமிழ் மக்களுக்கு விரோதமான செயற்பாட்டை செய்த தேசியக் கட்சி கடந்த தேர்தலில் ஒரு ஆசனத்தை பெறக் கூட முடியாத ஐக்கிய தேசியக் கட்சி, கோட்டாபய ராஜபக்சவின் எஞ்சிய காலப்பகுதிக்கு ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தற்போது தனது பதவியை தக்க வைப்பதன் நோக்கம் ஊழல் நிறைந்த ராஜபக்ச ஆட்சியினரை காப்பாற்றுவதற்காகவே இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

ஊழல்கள்
உலகமே வியந்து பார்க்கின்ற மோசடி விவகாரத்தில் ரணில் விக்ரமசிங்க தனது நண்பர்களை பாதுகாப்பதற்காக இவ்விடயத்தை மூடி மறைத்து நாட்டுக்கு துரோகச் செயலை செய்தார்.

இவ்வாறாக நாட்டுக்கு பல துரோகம் இழைத்த ரணில் விக்ரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாக வந்தால் நாடு மீண்டும் சிக்கலான நிலைமைக்கு மாறும்.

எனவே இவ்வாறான ஊழல்களை ஒழித்துக்கட்டும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவை மக்கள் தெரிவு செய்து அவரை நாட்டின் ஜனாதிபதியாக முயற்சி செய்ய வேண்டும்“ என்றும் மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.