;
Athirady Tamil News

வலுக்கும் ரணிலுக்கான ஆதரவு! கஞ்சனவும் இணைந்தார்

0

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வு எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ளார்.

ரணிலுக்கு ஆதரவு
குறித்த பதிவில்,

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதிக்கு எனது ஆதரவை வழங்குகின்றேன்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்கான சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளை முன்னெடுக்க ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்குவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.