வெனிசுவேலாவின் ஜனாதிபாதியாக மீண்டும் நிக்கோலஸ் மடுரோ: வெடித்தது போராட்டம்!
வெனிசுவேலாவின் (Venezuela) ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோவுக்கு ( Nicolás Maduro) ஆதரவாகவும் எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நடந்து முடிந்த வெனிசுவேலா ஜனாதிபதித் தேர்தலில் நிக்கோலஸ் மடுரோ மூன்றாவது முறையாகவும் வெற்றியடைந்துள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடரந்து தேர்தலில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்துள்ளன.
இடதுசாரி ஆயுதக்குழு
அதேநேரம், காவல்துறையினர், இராணுவத்தினர், மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவான இடதுசாரி ஆயுதக்குழுக்களும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, நிக்கோலஸ் மடுரோவின் வெற்றியில் நம்பகத்தன்மை இல்லை என அமெரிக்கா (USA) உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், சீனா (China) மற்றும் ரஷ்யா (China) போன்ற நாடுகள் நிக்கோலஸ் மடுரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.