;
Athirady Tamil News

ஐரோப்பிய நாடொன்றின் விசா திட்டம்… ரஷ்ய உளவாளிகளுக்கு வாய்ப்பாக அமையும் என அச்சம்

0

ரஷ்ய மற்றும் பெலாரஸ் குடிமக்களுக்கான விசா கட்டுப்பாடுகளை ஹங்கேரி தளர்த்துவதால், உளவு பார்க்கப்படும் இக்கட்டான நிலைக்கு ஐரோப்பா தள்ளப்படும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உளவு நடவடிக்கை
ஹங்கேரியின் குறித்த திட்டம் தொடர்பில் ஐரோப்பிய மக்கள் கட்சி (EPP) பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான கவலையை எழுப்பியுள்ளது. ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேலுக்கு EPP-ன் Manfred Weber எழுதிய கடிதம் ஒன்றில்,

ஹங்கேரியின் புதிய விதிகள் உளவு நடவடிக்கைகளுக்கு சாதகமாக அமையும் என்றும் தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை அது ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டமானது ரஷ்யர்களை மிக எளிதாக ஷெங்கன் பகுதியை பயன்படுத்த வழிவகுக்கும் என்றும், ஐரோப்பிய ஒன்றிய சட்டங்கள் முன்வைக்கும் கட்டுப்பாடுகளை மீறும் நிலை ஏற்படும் என அந்த கடிதத்தில் Weber குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் புதிய விதிகள் குறித்து ஹங்கேரியுடன் தொடர்பு கொள்ளப்படும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ரஷ்யா, பெலாரஸ் உட்பட குறிப்பிட்ட சில நாடுகளுக்கு விசா விதிகளை தளர்த்தும் திட்டத்தை இந்த மாதம் ஹங்கேரி முன்வைத்தது.

விசா கண்டிப்பாக
அத்துடன் தேசிய அட்டை என்ற திட்டத்தையும் குறிப்பிட்ட நாடுகளுக்கு அனுமதித்தது. இதனால் தேசிய அட்டைதாரர்கள் பாதுகாப்பு ஒப்புதல் ஏதுமின்றி ஹங்கேரியில் வேலை செய்யலாம்.

அத்துடன் தங்கள் குடும்பத்தினரையும் ஹங்கேரிக்கு அழைத்து வரலாம். இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும் இந்த தேசிய அட்டை என்பது, தேவையெனில் நீட்டித்தும் கொள்ளலாம்.

இதனிடையே, ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர் Peter Szijjarto தெரிவிக்கையில், ரஷ்ய மற்றும் பெலாரஸ் குடிமக்களுக்கு ஹங்கேரியில் நுழைவதற்கு விசா கண்டிப்பாக தேவை, ஏனென்றால் இது ஷெங்கன் பகுதி என அவரது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.