இஸ்ரேல் போருக்கு தயாராக உள்ளது: இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தித் தொடர்பாளர் திட்டவட்டம்!
தெற்கு பெய்ரூட்டை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலானது ஹிஸ்புல்லாவின் மூத்த இராணுவத் தளபதியை இலக்காக கொண்டே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில், இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுப்பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) மேற்கொற்கொள்ளப்பட்ட வான் வழித்தாக்தலில் 12 பேர் உயிரிழந்தனர்.
இராணுவத் தளபதி
குறித்த தாக்குதலுக்கு ஹிஸ்புல்லாவே (Hezbollah) காரணம் என்று கூறிய இஸ்ரேலிய அரசாங்கம் அதற்கு பதிலடி வழங்கவே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது, ஹிஸ்புல்லாவின் மூத்த இராணுவத் தளபதி தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில், பெய்ரூட் மீதான இஸ்ரேலிய (Israeli) தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள லெபனானின் (Lebanon) தற்காலிக பிரதமர் நஜிப் மிகாதி (Najib Mikati), இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என கூறியுள்ளார்.
ஹவுதிகள் மற்றும் ஹமாஸ்
குறிப்பாக, ஈரான் (Iran) , லெபனான் , ஹவுதிகள் (Houthis) மற்றும் ஹமாஸ் (Hamas) ஆகியவை இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், லெபனானுக்கான ஐ.நா.வின் (U.N) சிறப்பு ஒருங்கிணைப்பாளர் இஸ்ரேலின் இந்த தாக்குதல் மிகுந்த கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறாயினும், “இஸ்ரேல் போரை எதிர்பார்க்கவில்லை, ஆனால் அதற்கு தயாராக உள்ளது” என இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தித் தொடர்பாளர் அட்மிரல் டேனியல் ஹகாரி ( Daniel Hagari) திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.