விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கை சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக, எதிர்வரும் ஜனவரி 29 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (31) உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தினால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தி, அரசாங்கத்துக்கு 9 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக விமல் வீரவன்ச உள்ளிட்ட இருவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நீதிபதி உத்தரவு
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட இருவர் திறந்த மன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.