மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வெளியாகவுள்ள அறிவிப்பு
புதிய இணைப்பு
சிறிலங்கா பொதுஜன முன்னணியின் (Sri Lanka Podujana Peramuna) ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது எதிர்வரும் புதன்கிழமை அறிவிக்கப்படும் என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க (Udayanga Weeratunga) தெரிவித்துள்ளார்.
பிரபல வர்த்தகரும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பக்கூடிய ஒரே நபருமான தம்மிக்க பெரேரா மொட்டு கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் (Mahinda Rajapaksa) நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பு இன்று (31) விஜேராம பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
எவ்வாறாயினும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதுவரையில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை.
ஜனாதிபதி வேட்பாளர்
எனினும் நேற்றையதினம் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேட்பாளராக தம்மிக்க பெரேரா அதேநேரம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி நியமிக்கப்படவுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
நெருக்கடி நிலைமை
இதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் இன்று (31) அறிவிக்கப்படவிருந்த நிலையில், மேலும் சில நாட்கள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாகவே முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கட்சியிலிருந்து விலகிச் செல்லும் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்குப் பதிலாக புதிய அமைப்பாளர்களை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.