பற்றி எரிந்த ரஷ்ய பிராந்திய கட்டிடம்! 19 டிரோன்கள் மற்றும் ஏவுகணையை அழித்துவிட்டோம் – பாதுகாப்பு அமைச்சகம்
ரஷ்யாவின் பிராந்தியம் ஒன்றை தாக்கிய உக்ரைன் ஏவுகணை மற்றும் டிரோன்களை இடைமறித்துவிட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் டிரோன் தாக்குதல்
பெல்கோரோட் பிராந்தியத்தில் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதில் Shebekino நகரில் சில கட்டிடங்கள் பற்றி எரிந்தன.
19 டிரோன்கள் மற்றும் ஒரு கப்பல் ஏவுகணை தாக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
ஆனால், அவற்றில் 11 டிரோன்களையும், பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் 4 டிரோன்களையும், குர்ஸ்க், கலுகா மற்றும் ரோஸ்டோவ் பகுதிகள் மற்றும் கிரிமியா குடியரசு ஆகிய பகுதிகளில் தலா ஒரு டிரோன்களை, தங்கள் வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து அழித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படவில்லை
மேலும், ஏவுகணையை குர்ஸ்க் பகுதியில் அழித்ததாகவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் குர்ஸ்க் பிராந்திய ஆளுநர் அலெக்ஸி ஸ்மிர்னோவ் கூறுகையில்,
”நள்ளிரவுக்குப் பிறகு அடையாளம் தெரியாத இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சில மணிநேரங்களுக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனால் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படவில்லை” என்று தெரிவித்தார்.
அதேபோல், ”ஷெபெகினோ நகரில் உள்ள வணிக கட்டிடம், வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்துகள் ஏற்பட்டன. உக்ரேனியப் படைகள் கட்டிடங்கள் மீது கொத்துக் குண்டுகளை 6 முறை தாக்கின” என பெல்கோரோட் ஆளுநர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ் கூறினார்.
எனினும், இந்தத் தாக்குதல்கள் குறித்து ரஷ்யாவால் இணைக்கப்பட்ட கிரிமியா ஆளுநரிடம் இருந்து உடனடி கருத்து எதுவும் இல்லை.
இந்த நிலையில், ரஷ்யப் படைகள் ஒரு குரூஸ் ஏவுகணை மற்றும் 89 ஈரானால் வடிவமைக்கப்பட்ட தாக்குதல் டிரோன்களை, ஒரே இரவில் ஏவியதாக உக்ரைனின் விமானப்படையும் தெரிவித்துள்ளது.