;
Athirady Tamil News

பிரான்ஸ் ஜனாதிபதி கழுத்தில் முத்தமிட்ட விளையாட்டு அமைச்சர்.. சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்

0

விளையாட்டு அமைச்சருடன் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கட்டித்தழுவி முத்தமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 2024 ஒலிம்பிக் (Paris Olympics) போட்டிகள் நடந்துவருகிறது. இப்போட்டியின் திறப்பு விழாவின் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு பெண் அமைச்சர் ஒருவர் கழுத்தில் நெருக்கமாக முத்தம் கொடுத்துள்ளார். இந்நிலையில், அந்த புகைப்படம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலத்தைப் போல் அல்லாமல், வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில் செயின் (Sein) நதியில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டித் தொடக்க விழாவை பிரான்ஸ் அரசு நடத்தியது.

இந்த திறப்பு விழாவில் பிரான்ஸ் அதிபர் மற்றும் பல நாடுகளின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

திறப்பு விழாவில் அனைவரும் மும்முரமாக ஈடுபட்டிருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக பிரான்ஸ் விளையாட்டுத்துறை அமைச்சர் அமேலி ஓடே-காஸ்டெரா (Amelie Oudea-Castera) ஜனாதிபதியை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டார்.

அப்போது பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டலும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் காட்சியை கமெராவில் படம் பிடித்த பிரெஞ்சு இதழான Madame Figaro, இந்தப் புகைப்படத்தை கட்டுரையாக வெளிவிட்டது.

அதில், ‘இந்த முத்தம் மிகவும் விசித்திரமானது..’ என்று எழுதப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

‘உயர் பதவியில் இருக்கும் இரண்டு பேரும் இப்படி ஒரு நிகழ்ச்சியில் எப்படி நடந்து கொள்கிறார்கள்..?’ என்று கேட்கிறார்கள்.

‘சர்வதேச மேடையில் இரு தலைவர்கள் தகாத முறையில் நடந்து கொள்வது ஏற்புடையதல்ல’ என்றும், ‘இது மிகவும் தர்மசங்கடமான காட்சி’ என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.