;
Athirady Tamil News

பிரித்தானிய மர்மமான தீ விபத்து: 8 வயது சிறுமி மற்றும் 31 வயது பெண் உயிரிழப்பு

0

பிரித்தானியாவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட மர்மமான தீவிபத்தில் 8 வயது சிறுமி மற்றும் 31 வயது பெண் என இருவர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில் விபத்து
பிரித்தானியாவின் Huddersfield என்ற பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 31 வயது பெண் மற்றும் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இந்த விபத்தில் சிக்கிய மற்றொரு 10 வயது சிறுமி ஒருவர் தீவிரமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

லீட்ஸ் சாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு அதிகாரிகள் இன்று அதிகாலை 2.24 am மணியளவில் West Yorkshire பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இந்த சம்பவத்தை மர்மமான தீ விபத்தாக கருதி விசாரணையை தொடங்கியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.