இந்தப் பிரச்சனைகள் இருக்கா? அப்போ தவறுதலாக கூட சுரைக்காய் சாப்பிடாதீங்க
பொதுவாகவே கோடைக்காலத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக சுரைக்காயை இருக்கின்றது. சிலர் இதனை பச்சையாக சாப்பிட விரும்புவார்கள், பலர் அதை சமைத்து அல்லது ஜூஸ் செய்து சாப்பிடுவார்கள். அதன் ஆரோக்கிய நன்மைகளின் அடிப்படையில் பார்த்தால், இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆனால், அதை உட்கொள்வது குறிப்பிட்ட சில ஆரோக்கிய பிரச்சினை உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது பலரும் அறியாத உண்மை. அந்த வகையில் யாரெல்லாம் சுரைக்காய் சாப்பிடக்கூடாது என்பது குறித்து விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?
சந்தையில் எல்லா காலங்களிலும் மலிவாக கிடைக்கும் காய்கறிகளில் ஒன்றுதான் சுரைக்காய். அனைத்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்து. மேலும் இதில் அதிகளவில் நார்ச்சத்து காணப்படுவதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த தெரிவாக இருக்கும்.
சட்னி, சாம்பார், சுரைக்கய் பருப்பு குழம்பு, சுரைக்காய் ஜூஸ், சுரைக்காய் தக்காளி குழம்பு என பல்வேறு வழிகளிலும் இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள முடியும். கோடை காலங்களில் உடல் வெப்பத்தை தணிக்க இதனை பலரும் பச்சையாக சாப்பிடுவது வழக்கம்.
உணவு ஒவ்வாமை இருப்பவர்கள் சுரைக்காயை சாப்பிடுவது அபாயகரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே இவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உட்கொள்ள வேண்டும். சுரைக்காயில் உள்ள இயற்கை கலவைகள் தோல் ஒவ்வாமை அல்லது அரிப்புகளை தூண்டக்கூடியது.
செரிதான பிச்சினை ,மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு சுரைக்காய் தீர்வு கொடுக்கும். ஆனால் சீமை சுரைக்காய் பெரும்பாலானவர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
குறிப்பாக குறைந்த இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும்.பெண்கள் கர்ப்ப காலத்தில் சுரைக்காய் சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்வது மிகவும் சிறந்தது.
வாயு பிரச்சினை, அஜீரணம் அல்லது வயிற்றுப் புண் இருப்பவர்கள் தவறியும் சுரைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள கூடாது.இது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்களுக்கு சுரைக்காய் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். இதில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் சிறுநீரகத்தை வடிகட்டுவதில் சிரமம் ஏற்படும். இதன் காரணமாக, உடலில் பொட்டாசியத்தின் அளவு திடீரென அதிகரிக்க வாய்ப்பு காணப்படுகின்றது.