;
Athirady Tamil News

கனடிய முதியவர்களுக்கு ஓர் நற்செய்தி

0

கனடாவில் வயது முதிர்ந்தவர்களுக்கு கொடுப்பனவுத் தொகை அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதியவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவில் சிறிய அளவில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

நாட்டில் நிலவிவரும் பணவீக்க நிலைமைகளை கருத்தில் கொண்டு இவ்வாறு தொகை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது ஜூலை மாத கொடுப்பனவு 2.8 வீதத்தினால் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்கான வயது மூப்பு பாதுகாப்பு நலன்புரி கொடுப்பனவுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜூலை மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதத்திற்கான கொடுப்பு உணவு 0.7 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொடுப்பனவுத் தொகை 10 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வயது, கனடாவில் வாழும் காலம், பால் நிலை, அவர்களது வருமானம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த கொடுப்பனவுத் தொகை நிர்ணயம் செய்யப்படுகின்றது.

65 முதல் 74 வயது வரையிலானவர்களுக்கான நலன்புரி கொடுப்பணவுத் தொகை வழங்கப்பட உள்ளது. 65 முதல் 74 வயது வரை வரையிலான தகுதியான முதியவர்களுக்கு 718.33 டாலர்கள் வரையில் கொடுப்பனவுத் தொகை வழங்கப்பட உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.