;
Athirady Tamil News

நேரடியாக வங்கிக் கணக்கில் இன்று வைப்பிலிடப்படும் பணம்! மாணவர்களுக்கு ஜனாதிபதி வழங்கும் சலுகை

0

ஜனாதிபதி நிதியத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் புலமைப்பரிசில் திட்டங்களின் கீழ் தகுதி பெற்ற புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கான 2024 ஆகஸ்ட் மாதத்திற்கான புலமைப்பரிசில் கொடுப்பனவு இன்று (01) புலமைப்பரிசில் பெறுபவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வைப்புச் செய்யப்படும்.

புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் வங்கிகளில் வைப்பு செய்யப்படும் போது, புலமைப்பரிசில் பெறுபவர்கள் அனைவருக்கும் இது குறித்து குறுஞ்செய்தி (SMS) மூலம் தெரிவிக்கப்படும்.

வழங்கப்படும் நிதி

2022/2023 க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி பெற்று, க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள 3000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா வீதம் வழங்கப்படும் புலமைப்பரிசில் தவணைத் தொகையின் 17 ஆவது தவணையும், 2023/2024 க. பொ. த இல் சாதாரண தரத்தில் சித்தி பெற்று, க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள 6000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா வீதம் வழங்கப்படும் புலமைப்பரிசில் தவணைத் தொகையின் 06ஆம் தவணை உரிய கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், தரம் 01 தொடக்கம் தரம் 11 வரை கல்வி கற்கும் 100,000 மாணவர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபா வீதம் வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகையின் 05 ஆவது தவணை, பிரிவெனா மற்றும் பிக்குனிமார்களுக்கும், பிரிவெனா (சாதாரண தரம்)/ க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி பெற்று, “பிராசீன” பரீட்சைகள் அல்லது க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பிக்கு மாணவர்கள் உட்பட 500 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா வீதம் வழங்கப்படும் புலமைப்பரிசில் தவணைத் தொகையின் 04 தவணைத் தொகையும் இன்று உரியவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பிரிவெனா கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் மற்றும் பிக்குனிமார்கள் உட்பட தரம் 01 முதல் தரம் 11 வரையான 3000 மாணவர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபா வீதம் வழங்கப்படும் புலமைப்பரிசில் தவணைத் தொகையின் 04 தவணைத் தொகையும் இன்று உரியவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

100,000 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டம் மற்றும் பிரிவெனா, பிக்குனி மாணவர்களுக்கான தற்போது வழங்கப்படும் மாதாந்த புலமைப்பரிசில் தவணைகளுக்கு மேலதிகமாக, புலமைப்பரிசில் வழங்குவதற்குத் தகுதிபெற்று, ஆனால் ஜனாதிபதி நிதியத்திற்கு தாமதமாகப் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் தொடர்பில் கொடுப்பனவுகள் வழங்கத் தேவையான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விண்ணப்பப் படிவங்கள்
மேலும் புலமைப்பரிசில் பெறுபவர்கள் அனைவருக்கும் 2024 ஆகஸ்ட் மாத நிலுவைத் தொகையுடன் புலமைப்பரிசில் தவணைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதன்படி, இந்த புலமைப்பரிசில் திட்டங்களுக்காக சுமார் 116,000 மாணவர்களுக்கு 5000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை செலுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை ஜனாதிபதி நிதியம் மேற்கொண்டு வருகின்றது.

ஒரு இலட்சம் புலமைப்பரிசில் வேலைத்திட்டத்திற்கு பாடசாலை மட்டத்தில் கல்வி மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டதால், விண்ணப்ப படிவங்கள் தாமதமானதாலோ, வங்கி கணக்குகள் தொடர்பான சிக்கல்களாலோ இதுவரை புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் கிடைக்காத, ஆனால் புலமைப்பரிசில் பெறத் தகுதியானவர்களுக்கான கொடுப்பனவுகள் 2024 ஆகஸ்ட் மாதத்தில் வைப்புச் செய்யப்படவுள்ளதோடு, அது குறித்த விபரங்கள் ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்படும்.

இதன்படி, மேலதிக விபரங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கமான www.facebook.com/president.fund ஐப் பார்க்கவும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.