;
Athirady Tamil News

பிரித்தானியா செல்லும் புலம்பெயர் மாணவர்களுக்கான முக்கிய தகவல்

0

அண்மையில் உயர் கல்வி கற்பதற்காக பிரித்தானியா (UK) செல்லும் மாணவர்களுக்கான விதிகளில் அந்நாட்டு அரசு மாற்றங்களை கொண்டு வந்தது.

கடந்த மார்ச் மாதத்தில் அப்போதைய பிரித்தானிய உள்துறைச் செயலரான ஜேம்ஸ் கிளெவர்லி, பட்டப்படிப்பு படிப்பதற்காக சர்வதேச மாணவர்கள் பிரித்தானியா விசா பெறுவது தொடர்பில் மீளாய்வு ஒன்றிற்கு அழைப்புவிடுத்துள்ளார்.

அதன் படி, புலம்பெயர் ஆலோசனை குழு, மே மாதம் 14ஆம் திகதி மீளாய்வின் முடிவுளை சமர்பித்தது. பட்டப்படிப்பு படிப்பதற்காக சர்வதேச மாணவர்கள் பிரித்தானியா விசா பெறும் முறை மூலமாக, அதிக அளவில் இந்திய மாணவர்கள் பயன் பெற்றுள்ளதாக மீளாய்வு முடிவகளின் மூலம் தெரியவந்துள்ளது.

விதி மாற்றம்
மேலும், பிரித்தானிய பல்கலைக்கழகங்களின் வருவாய், உள்ளூர் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதாலும், ஆராய்ச்சிகளுக்கு நிதி வழங்குவதாலும் ஏற்படும் இழப்புகள் ஆகியவற்றை சந்திக்க, சர்வதேச மாணவர்கள் செலுத்தும் கல்விகட்டணம் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பிரித்தானிய அரசு, அந்நாட்டுக்கு கல்வி கற்க வரும் மாணவர்களக்காக விதிகளில் சில மாற்றங்களை கொண்டுவந்தது.

அதன் படி, பிரித்தானியாவுக்கு கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்கள், தங்களுடன் தங்கள் குடும்பத்தினரை அழைத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

வகுப்புகள் ஆரம்பம்
எனினும், முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும், முனைவர் பட்டம் பெறுவதற்காக வரும் மாணவர்களுக்கும் இந்த புதிய விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவில் செப்டம்பர் மாதம் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் துவங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.