ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு
குடியிருப்பு விசா காலம் காலாவதியாகி உள்ளவர்களுக்கு அபராதம் இன்றி நாட்டை விட்டு வெளியே ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) கால அவகாசம் வழங்கியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அமீரக அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான மத்திய ஆணையம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
விசா காலாவதியான பின்னரும் அமீரகத்தில் தங்கியிருப்பவர்கள் தங்களது நிலையை மாற்றிக் கொள்ளும் வகையில் பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமன்னிப்பு
அத்துடன், அவர்களுக்கு 2 மாத கால அவகாசம் வழங்கப்படுவதுடன், செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் பொதுமன்னிப்பு நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விசா விதிமீறலில் ஈடுபட்டவர்கள் அபராத தொகை எதுவும் இல்லாமல் சொந்த நாட்டுக்கு திரும்பி செல்ல முடியும்.