பிரித்தானியாவின் பிரதான வங்கி வட்டி வீதத்தில் மாற்றம்
பிரதான வட்டி வீதத்தை இங்கிலாந்து (England) வங்கி குறைப்பதற்கு முடிவு செய்துள்ளது.
அதன் படி, நேற்றையதினம் (01) பிரதான வட்டி வீதத்தை 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பணவீக்க அழுத்தங்கள் கணிசமான அளவு குறைந்துள்ளதால், இவ்வாறு இங்கிலாந்து வங்கி, பண மதிப்பீட்டில் வட்டி வீதத்தை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.
வட்டி வீத குறைப்பு
இதேவேளை, கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக 2020 மார்ச் மாதத்திற்கு பிறகு இங்கிலாந்து, பிரதான வட்டி வீதங்களை குறைப்பது முதல் முறையாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட Monetary Policy Committee வட்டி வீதத்தை 5-4 என்ற வித்தியாசத்தில் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், borrowing costs ஐந்து சதவீதம் வட்டி வீதத்தை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.