;
Athirady Tamil News

நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்து வெளியான தகவல்

0

இந்தியப் (India) பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகப் புதுடில்லியில் (New Delhi) உள்ள தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அத்தோடு, நேற்றையதினம் (07) இலங்கைக் (Sri Lanka) கடற்படையினரின் படகு மோதியதால் இந்திய கடற்றொழிலாளர் படகொன்று கடலில் மூழ்கியதில் ஒருவர் பலியான சம்பவம் பதிவாகியிருந்தது.

பதில் உயர்ஸ்தானிகர்
இதனையடுத்து, டெல்லியில் உள்ள இலங்கை பதில் உயர்ஸ்தானிகர் இந்திய வெளியுறவு அமைச்சால் அழைக்கப்பட்டு இராஜதந்திர ரீதியிலான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இந்தச் சூழ்நிலையில் பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளமை சர்வதேசக் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.