;
Athirady Tamil News

அதிகரிக்கும் பதட்டம்… இஸ்ரேலுக்கான விமான சேவைகளை ரத்து செய்யும் நிறுவனங்கள்

0

ஈரானில் ஹமாஸ் தலைவர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், இதுவரை இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்ற போதும், அந்த நாட்டிற்கான விமான சேவைகளை பல நிறுவனங்கள் ரத்து செய்யத் தொடங்கியுள்ளன.

ஹமாஸ் அரசியல் தலைவர்
ஹமாஸ் படைகளின் மிக முக்கியமான இரு தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானில் நடந்த தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் கொல்லப்பட்ட நிலையில், பழி தீர்ப்பது உறுதி என்றே அந்த நாடு சூளுரைத்துள்ளது.

மட்டுமின்றி, ஜூலை 13ம் திகதி ஹமாஸ் படைகளின் ராணுவப் பிரிவு தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இப்படியான நெருக்கடி மிகுந்த சூழலில், விமான சேவை நிறுவனங்கள் இஸ்ரேலுக்கான விமானங்களை ரத்து செய்ய தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Delta மற்றும் United விமான சேவை நிறுவனங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக இஸ்ரேலுக்கான சேவையை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. புதன்கிழமை நள்ளிரவு முதல் விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக United அறிவித்துள்ளது.

மேலும், உரிய நடவடிக்கை பின்னர் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. Delta விமான சேவை நிறுவனம் தெரிவிக்கையில், தங்களின் இணைய பக்கமூடாக Air France மற்றும் EL AL Israel ஆகிய விமானங்களில் இஸ்ரேலுக்கு முன்பதிவு செய்யலாம் என குறிப்பிட்டுள்ளது.

அக்டோபர் 15ம் திகதி வரையில்
மேலும், ஆகஸ்ட் 14க்கு முன் டெல்டா நிறுவனத்தில் டெல் அவிவ் அல்லது அங்கிருந்து பயணத்தை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு பயண விலக்கு வழங்கப்பட்டுள்ளது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனிடையே, Air Canada நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 15ம் திகதி வரையில் இஸ்ரேலுக்கான தங்கள் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

ரொறன்ரோவில் இருந்து அக்டோபர் 15ம் திகதி இஸ்ரேலுக்கு அடுத்த விமானம் புறப்பட உள்ளது. 2023 அக்டோபர் 7ம் திகதி முன்னெடுக்கப்பட்ட தாக்குதலை அடுத்து பல விமான சேவை நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு விமான சேவையை ரத்து செய்தது.

ஆனால் சில நிறுவனங்கள் பின்னர் சேவையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.