பாதுகாப்புக்கு முன்னுரிமை… சில மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளியைத் தவிர்க்கும் விமானங்கள்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல் வெடிக்கக்கூடும் என்ற கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் முதன்மையான விமான நிறுவனங்கள் ஈரானிய மற்றும் லெபனான் வான்வெளியைத் தவிர்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் மீதே சந்தேகம்
அத்துடன், பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் இஸ்ரேலுக்கான விமான சேவையை ரத்து செய்து வருகிறது. ஈரானில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த படுகொலைக்கு எந்த நாடும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில், இஸ்ரேல் மீதே சந்தேகம் வலுத்துள்ளது. இந்த நிலையில் ஈரானிய நிர்வாகம் பதலிடிக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் ஈரானிய வான்வெளியில் பயணிப்பதை சிங்கப்பூர் விமான சேவை நிறுவனம் நிறுத்தியுள்ளது. பாதுக்காப்புக்கு முதன்மையான முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதே நிலையில், தைவான் நாட்டின் EVA விமான சேவை நிறுவனம் மற்றும் சீனா விமான சேவை நிறுவனம் ஆகியவை ஈரான் வாண்வெளியைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
விமான சேவை நிறுவனங்கள்
ஈரானின் பிராந்திய நட்பு நாடுகளான லெபனான், ஈராக் மற்றும் ஏமன் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் ஈரானின் உயர் மட்ட அதிகாரிகள் குழு சந்திப்பை முன்னெடுத்ததுடன், இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல் குறித்து தீவிர ஆலோசனையும் நடத்தியுள்ளதாக தகவல் கசிந்த நிலையிலேயே,
ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எச்சரிக்கை விமான சேவை நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விமான சேவை நிறுவனங்கள் உட்பட பல விமான நிறுவனங்கள் ஏற்கனவே ஈரான் வான்வெளியைத் தவிர்க்கின்றன. குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை ஈரான் முன்னெடுத்ததன் பின்னர் பாதையை மாற்றிக்கொண்டுள்ளனர்.
ஆனால் Etihad, Emirates, FlyDubai, Qatar Airways மற்றும் Turkish Airlines ஆகியவை தற்போதும் ஈரான் வான்வெளியை பயன்படுத்தியே வருகிறது.
இதனிடையே, கடந்த இரு நாட்களில் Air India, Lufthansa, United, Delta Air மற்றும் இத்தாலியின் ITA ஆகிய நிறுவனங்கள் இஸ்ரேலுக்கான விமான சேவைகளை மொத்தமாக நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனேடிய விமான சேவை நிறுவனம் ஒரு மாத காலம் லெபனான் வான்வெளியைத் தவிர்க்க இருப்பதாக அறிவித்துள்ளது.