புடவையில் கமலா ஹாரிஸ்.! புகைப்படத்தை பகிர்ந்து இன தாக்குதல்களை அதிகரித்துள்ள டிரம்ப்
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் இன அடையாளம் குறித்து தொடர்ந்து இரண்டாவது நாளாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான இந்திய அவம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் (Kamala Harris) மீது குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) தொடர்ந்து இன தாக்குதல் நடத்தி வருகிறார்.
கமலா ஹாரிஸ் இந்தியரா? அல்லது கறுப்பினத்தைச் சேர்ந்த பெண்ணா? என்று டிரம்ப் கேட்டுள்ளார் என்பது தெரிந்ததே.
அவர் இந்தியர் என்பது எனக்கு தெரியும் என்றும், இப்போது திடீரென்று அவர் ஒரு கறுப்பினதவறாக அங்கீகரிக்கப்பட விரும்புவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், விழக்கிழமையன்று டிரம்ப் தனது சமூக ஊடகமான Truth-இல் கமலா ஹாரிஸ் புடவையில் இருக்கும் குடும்பப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
புகைப்படத்துடன், “பல வருடங்களுக்கு முன் எடுத்த அருமையான புகைப்படத்தை பகிர்ந்தமைக்கு நன்றி கமலா. இந்திய பாரம்பரியத்தின் மீதான உங்கள் பாசம், நட்பு மற்றும் அன்பு பாராட்டத்தக்கது.” என்று எழுதியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் கமலா ஹாரிஸின் இன அடையாளம் முக்கியப் பிரச்சினையாக மாறியுள்ளது, டிரம்ப்பின் தனிப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.