;
Athirady Tamil News

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் ஐந்து மாடுகளும் ஒரு வீடும் வழங்கும் நாடு: சில சுவாரஸ்ய தகவல்கள்

0

ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்று நாடு திரும்பும் வீரர்களை அவர்கள் சார்ந்த நாடுகள் கொண்டாடுவதுடன், பணப்பரிசும் அள்ளி வழங்குவது வழக்கம்.

ஆனால், ஒரு குறிப்பிட்ட நாட்டில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ஐந்து மாடுகளும் ஒரு வீடும் வழங்கப்படுவதைக் குறித்த ஒரு சுவாரஸ்ய செய்தி வெளியாகியுள்ளது.

அந்த நாடு இந்தோனேசியா…
2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தோனேசிய badminton வீராங்கனைகளான Greysia Polii மற்றும் Apriyani Rahayu தங்கப்பதக்கம் வென்றார்கள். அந்நாட்டுக்காக ஒரே தங்கப்பதக்கத்தை வென்றது அவர்கள்தான்.

வெற்றி பெற்று நாடு திரும்பிய அவர்களுக்கு பரிசுகளை அள்ளி வழங்கிய அரசாங்கம், ஐந்து பில்லியன் rupiahவை பரிசாக வழங்கியது.

இந்த இருவரில், Apriyani Rahayu என்னும் வீராங்கனை Sulawesi தீவைச்சேர்ந்தவர், அவருக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதற்காக உள்ளூர் அரசாங்கம் ஐந்து மாடுகளும் ஒரு வீடும் வழங்குவதாக உறுதியளித்தது.

பிற பரிசுகள்
அதுபோக, ஜகார்த்தாவிலுள்ள காபி ஷாப் ஒன்று, பதக்கம் வென்ற வீராங்கனைகள், தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் காபி ஷாப்பில் இலவசமாக காபி அருந்தலாம் என அறிவித்தது.

அத்துடன், இந்தோனேசிய சுற்றுலாத்துறை அமைச்சர், பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு நாட்டின் ஆறு சுற்றுலாத்தலங்களில் இலவசமாக தங்க அனுமதியளிக்கப்படும் என்றும் அறிவித்ததாக, உள்ளூர் ஊடகங்கள் அப்போது செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.