80 கோடி இந்தியர்களை வறுமையில் இருந்து மீட்ட Smartphones: ஐ.நா. சபை பாராட்டு
இந்தியாவில் பரவி வரும் டிஜிட்டல் புரட்சிக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு தெரிவித்துள்ளது.
இதன் மூலம், கடந்த 5 ஆண்டுகளில் 80 கோடி பேரை வெறும் ஸ்மார்ட் போன் மூலம் இந்திய அரசு வறுமையில் இருந்து மீட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் (Dennis Francis) தெரிவித்தார்.
உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் அவர் பேசினார்.
இந்தியாவின் கிராமப்புறங்களுக்கு வங்கிச் சேவைகள் விரிவடைந்திருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
‘ஒரு நாட்டின் விரைவான வளர்ச்சிக்கு டிஜிட்டல்மயமாக்கல் (Digitalisation) காரணமாக உள்ளது.
உதாரணத்திற்கு இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள்.. கடந்த ஐந்து முதல் ஐந்து வருடங்களில் 800 மில்லியன் (80 கோடி) இந்தியர்கள் ஸ்மார்ட் போன்களின் பயன்பாட்டினால் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, வங்கிச் சேவைகள் மற்றும் ஓன்லைன் கட்டண முறைகள் இந்தியாவின் கிராமப்புறங்களுக்கு கிடைக்கவில்லை.
ஆனால், தற்போது கிராமப்புற விவசாயிகள் ஸ்மார்ட்போன் மூலம் பணம் பெற்றுக்கொண்டு சிட்டிகையில் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் இணையத்தின் பரவலானது வங்கிச் சேவைகளை எளிதாக்குவதற்கும், நாட்டு மக்களுக்குப் பலனளிப்பதற்கும் பெரிதும் உதவுகிறது. மற்ற நாடுகளும் கிராமப்புற வளர்ச்சிக்கு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,’ என்றார்.