வயநாட்டில் நிலச்சரிவு எப்படி ஏற்பட்டது? – ISRO வெளியிட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள்
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து ISRO செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
வயநாட்டில் நிலச்சரிவு எப்படி ஏற்பட்டது?
அதிகனமழையால் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் முண்டக்கை, சூரல்மலை மற்றும் மேம்பாடி போன்ற இடங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏற்பட்ட நிலச்சரிவில் உயரிழந்தோரின் எண்ணிக்கை 300 ஐ தாண்டியுள்ளது.
மேலும் 200 இற்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்பதால் மேலும் பலி எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
பலர் மீட்கப்பட்டு மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீட்டு பணியில் மாநில தேசிய பேரிட குழுவினர், ராணுவத்தினர், தீயணைப்பு துறையினர் என பல்துறையை சேர்ந்தவர்கள் தன் உயிரை பணயம் வைத்து பல உயர்களை காப்பாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இஸ்ரோ வெளியிட்ட செயற்கைக்கோள் புகைப்படம் பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ISRO வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்
குறித்த புகைப்படத்தில், நிலச்சரிவிற்கு முன்பு இருந்த மலைப்பகுதி மற்றும் நிலச்சரிவிற்கு பின்பு உள்ள மலைப்பகுதி வயநாட்டை உலுக்கிய கோர முகத்தை வெளிக்காட்டுகிறது.
86,000 சதுரமீட்டர் பரபளவிற்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் 8 மீற்றர் வரை மண் ஆற்றுடன் கலந்து சரிந்துள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும் சூரல்மலை பகுதிகளில் பெய்த அதீத மழையே அதிகப்படியான நிலச்சரிவுக்கு காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.