;
Athirady Tamil News

தடுக்காவிட்டால் முழு உலகத்திற்கும் ஆபத்து: ஈரான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

0

இஸ்ரேலை (Israel) தடுத்து நிறுத்தாவிட்டால் மத்திய கிழக்கு மட்டுமின்றி முழு உலகத்திற்கும் ஆபத்து என ஈரான் (Iran) எச்சரித்துள்ளது.

ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவரான இஸ்மாயில் ஹனியி (Ismail Haniyeh ) (வயது 62) கடந்த புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வீட்டில் இஸ்மாயில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது படுகொலைக்கு இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் ஏற்கனவே அறிவித்திருந்தது.

எச்சரிக்கை
இவ்வாறானதொரு பின்னணியில் மீண்டும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி பாகரி கனி (Ali Bagheri Kani) எச்சரிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அதன் போது, கடந்த பத்து மாதங்களில், இஸ்ரேல் காசா பகுதியில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இப்போது இஸ்ரேலின் குற்றங்கள் பெய்ரூட், தெஹ்ரான் மற்றும் ஏமன் வரை விரிந்துள்ளது.

இஸ்ரேலை தடுத்து நிறுத்தாவிட்டால், மத்திய கிழக்கு பகுதியின் அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி, உலகத்திற்கே ஆபத்தாகும்.” என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.